என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லவ் ஷேர் சப்ஸ்கிரைப்- திரைவிமர்சனம்
    X

    லவ் ஷேர் சப்ஸ்கிரைப்- திரைவிமர்சனம்

    • படத்தின் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை.

    தன்னுடன் படிக்கும் கல்லூரி தோழியான வடமாநில பெண் சிம்ரன் அத்வானியை ஆதவ் கிருஷ்ணா காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கின்றனர். சிம்ரனின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். காசியில் இருக்கும் தனது அம்மாவிடம் ஆதவை அறிமுகம் செய்ய அங்கு அழைத்துச் செல்கிறார்.

    ஆனால், செல்லும் வழியிலேயே சிம்ரன் காணாமல்போய் விடுகிறார். இது வீட்டிற்கு தெரியவர சிம்ரனின் தந்தை ஆதவை சந்தேகப்படுகிறார். மிரட்டுகிறார். இறுதியில், ஹீரோயினுக்கு என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா ? என்பது படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ஹீரோவின் கதாப்பாத்திரம் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹீரோயினை காதல் செய்கிறார். போலீசிடம் அடி வாங்குகிறார். ஹீரோயிசம் இல்லை. அழகாக வந்து செல்லும் ஹீரோயினின் கதாப்பாத்திரம் முற்பகுதியில் காட்சிகள் இருந்தாலும் பிற்பகுதியில் பெரிதாக வேலை இல்லை. ஹீரோயின் அம்மாக வரும் வினோதினி சில சீன்கள் ஓரளவு ரசிக்க முடிகிறது.

    இயக்கம்

    காதல்- கடத்தல்- அடிதடி- முடிவு என்கிற அடிப்படையில் படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மகாலட்சுமி முருகன். படத்தின் முதல் பாதி நல்ல காதல் கதை உள்ள படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை தருகிறது. ஒரு நல்ல காதல் கதையை கையில் எடுத்து கொண்டு, முடிக்க தெரியாமல் முடித்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல்

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார் காசியை வண்ணமயமாக காண்பித்திருக்கிறார்.

    இசை

    படத்தின் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை.

    ரேட்டிங்-2/5

    Next Story
    ×