என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொலைச்சேவல்- திரைவிமர்சனம்
    X

    கொலைச்சேவல்- திரைவிமர்சனம்

    சாந்தன் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உயிரூட்டும் வகையில் உள்ளது.

    நாயகன் கலையரசனும்- நாயகி தீபா பாலுவும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்கின்றனர். வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவும், கலையரசனும் நிறைசூலி தெய்வதற்த்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால் இருவரும் தங்களது ஊருக்கு திரும்புகிறார்கள்.

    குலதெய்வத்தை வணங்க சென்றாலும், மனதுக்குள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனும் செல்லும் தீபா பாலு, எதிர்பாக்காத பிரச்சனை ஒன்றை எதிர்கொள்கிறார்.

    சாமி கும்பிட்டு வீடு திரும்ப நினைக்கும் கலையரசன் தீபாவை சுற்றி திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்த அபாயத்தில் இருந்து அவர்கள் மீண்டார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    தனது எதார்த்தமான நடிப்பு மற்றுரும் கடுமையான உழைப்பாலும் கதைக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறார் நாயகன் கலையரசன். கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தீபா பாலு, குடும்ப பாங்கான முகத்தோடு வலம் வருகிறார். அவர், இதயம் கனக்க செய்யும் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறார்.

    கடினமான காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டு நடித்திருக்கும் அவருக்கு தனி பாராட்டுகள். பால சரவணன் குணச்சித்திர நடிகராக நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.

    இயக்கம்

    சமூகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் கொடூரமான செயலை மையக்கருவாகக் கொண்டு, அதை எதார்த்தமான முறையில் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன்.

    காதல் ஜோடி அனுபவிக்கும் வலியும், வேதனையும் மிக்கதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    உணர்வுப்பூர்வமான காதல் தம்பதிக்கு இறுதியில் நடக்கும் விபரீதம் வன்முறையின் உச்சமாக இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் சற்று முகம் சுழிக்க வைக்கிறது.

    ஒளிப்பதிவு

    பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் கொடூரமான மனங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

    இசை

    சாந்தன் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உயிரூட்டும் வகையில் உள்ளது.

    ரேட்டிங்-2.5/5

    Next Story
    ×