என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வா வாத்தியார் பட தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி
    X

    வா வாத்தியார் பட தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி

    • 'வா வாத்தியார்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாகிறது.
    • தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமாக கார்த்தி இப்படத்தில் நடித்துள்ளார்.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

    இப்படம் கார்த்தியின் 26-வது படமாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'வா வாத்தியார்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் வா வாத்தியார் பட தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது தெலுங்கில் பேசிய கார்த்தி, 'சூர்யா ஐதராபாத்தில் தான் சூட்டிங்கில் உள்ளார்' என்று கூற ரசிகர்கள் கைதி 2 என்ற கூச்சல் இட்டனர். இதனை தொடர்ந்து கைதி 2 விரைவில் வரும் என்று கார்த்தி பதில் அளித்தார்.

    Next Story
    ×