என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அருண்குமார் இயக்கும் அடுத்த படத்தில் கமல்?
    X

    அருண்குமார் இயக்கும் அடுத்த படத்தில் கமல்?

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்தார்.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.

    'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்தார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. தற்பொழுது இயக்குநர் எஸ்.யு அருண்குமார் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    இப்படத்தின் கதாநாயகனாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஸ்கிரிப்ட் முடியும் தருவாயில் இருக்கிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×