என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விக்ரம் 2 பற்றிய கேள்வி - கமல்ஹாசன் கொடுத்த அப்டேட்
    X

    'விக்ரம் 2' பற்றிய கேள்வி - கமல்ஹாசன் கொடுத்த அப்டேட்

    • கடந்த 5 மாதங்களாக படிப்பில் கவனம் செலுத்திய கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார்.
    • கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’, ‘இந்தியன்-3’, ‘கல்கி-2’ ஆகிய படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் கமல்ஹாசன் ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க அமெரிக்கா சென்று இருந்தார். கடந்த 5 மாதங்களாக படிப்பில் கவனம் செலுத்திய கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார்.

    அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தக் லைஃப் படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகும் என கூறினார். பின்னர் 'விக்ரம் 2' படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது வேறு ஒரு ஸ்கிரிப்டை எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

    இதனிடையே, நிகழ்கால அரசியலில் பெரியார் தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, உங்களுக்காக நின்னு பேசினேன் என்று கூறிவிட்டு சென்றார்.

    தற்போது கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைஃப்', 'இந்தியன்-3', 'கல்கி-2' ஆகிய படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×