என் மலர்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் பாலையா படத்தின் ரீமேக்கா? ஹெச். வினோத் விளக்கம்
பாலையா நடித்துள்ள பகவந்த் கேசரி-யின் தமிழ் ரீமேக்தான் ஜனநாயகன் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக பகவந்த் கேசரி படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜனநாயகன் விஜய் சார் படம் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விஜய் சாருடைய கடைசிப் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பது படம் திரைக்கு வந்த பின்புதான் தெரியும். வாரிசு படப்பிடிப்பு தளத்தில் விஜய் சாரை சந்தித்து பேசியிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2-ந்தேதி ஜனநாயகன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. அதன் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என தெரிகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜனநாயகன்'. கே.வி.என் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் அனிருத் இசையமைத்துள்ளார்.
பகவந்த் கேசரியின் ரீமேக் என வதந்தி பரவி வரும் நிலையில் ஜனநாயகன் பட இயக்குநர் ஹெச். வினோத் கூறுகையில் "ஜனநாயகன் படத்திற்காக நாங்கள் 6 மாறுபட்ட வெர்சனில் கதை எழுதினோம். இந்த கதை முக்கியமாக விஜய், பாபி தியோல், மமிதா பைஜு ஆகியவரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த பின், இந்த படத்திற்கு ஏன் ஜனநாயகன் டைட்டில் வைக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள். விஜய் அரசியலுக்குள் நுழைந்ததில் இருந்து, கதையில் அரசியல் தொடர்பான தகவலை சேர்த்தேன். சற்று தயக்கத்துடன் தயாரிப்பாளரிடம் இந்த விசயத்தை சொன்னேன். ஆனால், அவர் மிகவும் சந்தோசம் அடைந்தார். அரசியல் தொடர்பான கருத்துகள் குறித்து உறுதியான சில ஆலோசனைகளும் வழங்கினார்.
இது தளபதி படம். ரசிகர்கள் முதல் காட்சிக்காக காத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் டீசர், டிரெய்லர், பாடல்கள் மற்றும் ஸ்கீரின் மூலம் படத்தின் அடையாளம் குறித்து வதந்திகளுக்கு விடை கிடைக்கும். அத்துடன மேற்கொண்டு தெளிவும் கிடைக்கும்" என்றார்.
ஆனால், ரீமேக் குறித்து வதந்தி வருகிறதே, என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என நேரடியாக பதில் அளிக்கவில்லை.






