என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குநர் இவங்களா?
    X

    சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குநர் இவங்களா?

    • ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி இருக்கும் 'மதராஸி' படத்தின் வெளியீட்டை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார் சிவா.
    • இயக்குனர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் நடிப்பில் தனது அடுத்த படத்தில் பணிபுரிய இருப்பதை உறுதி செய்துள்ளார்.

    நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமியின் 'அமரன்' படத்திற்கு பின், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி இருக்கும் 'மதராஸி' படத்தின் வெளியீட்டை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.

    மதராஸி திரைப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ரந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர் கள்ளாரக்கல், பிஜு மேனன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவு சுதீப் எலமோன் மற்றும் எடிட்டிங் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் மேற்கொள்கிறார்கள்.

    தமிழுடன், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது. ஹிந்தி பதிப்புக்கு 'தில் மாதராசி' என பெயரிடப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைப்படம் இயக்க இருப்பதாக உறுதி செய்தார்.

    இதனிடையே, சிவகார்த்திகேயன் அடுத்ததாக புஷ்கர்-காயத்ரி இயக்குநர் ஜோடியுடன் கூட்டணி சேரவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. மேலும், இப்படத்துக்கு இசையமைப்பாளராக சாம் சிஎஸ் இணைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆனால், இந்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட குழுவினர் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

    புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மற்றும் கிரியேட்டர் ப்ரொடியூசராக பணியாற்றி சுழல் மற்றும் சுழல் 2 இணைய தொடர் வெளியானது.

    Next Story
    ×