என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராமாயணம் நடக்கலன்னா நம்ம அகதிகளா ஆகியிருக்க மாட்டோம்ல - சசிகுமாரின் Freedom பட டிரெய்லர் ரிலீஸ்
    X

    ராமாயணம் நடக்கலன்னா நம்ம அகதிகளா ஆகியிருக்க மாட்டோம்ல - சசிகுமாரின் Freedom பட டிரெய்லர் ரிலீஸ்

    • அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகுமார் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

    அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 10 வெளியாக இருக்கிறது.

    Next Story
    ×