என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அன்று நான் வியந்தேன்.. இன்று உலகமே வியக்கிறது..!- கபடி வீராங்கனையை பாராட்டிய ஜி.வி.பிரகாஷ்
    X

    அன்று நான் வியந்தேன்.. இன்று உலகமே வியக்கிறது..!- கபடி வீராங்கனையை பாராட்டிய ஜி.வி.பிரகாஷ்

    • 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
    • பெண்கள் அணி ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.

    ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி 2025 (3வது பதிப்பு) தற்போது பஹ்ரைனில் (மனாமா) நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

    இதில் இந்தியா கபடி போட்டியில் இரு தங்கங்களை வென்றுள்ளது: ஆண்கள் அணி ஈரானை 35-32 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதேபோல் பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.

    இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்தேன். இன்று உலகமும் வியக்கிறது.

    அன்புத் தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×