என் மலர்
சினிமா செய்திகள்

ரஜினியை வைத்து படம் இயக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது - பிருத்விராஜ்
- நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'.
- நேற்று எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கேரளாவில் நடைபெற்றது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கேரளாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மம்மூட்டி & மகிழ் திருமேனி கலந்துக் கொண்டனர்.
இதில் பிருத்விராஜ் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். " தயாரிப்பு நிறுவனமான லைக்கா என்னை ரஜினிகாந்த் வைத்து இயக்க வாய்ப்பு கொடுத்தது. என்னை மாதிரி புதிய இயக்குனர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது அற்புதமான ஒன்று. அது கிடைக்க.நானும் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தேன் ரஜினிகாந்த் சாருக்கு கதை பண்ண. ஆனால் லைக்கா கொடுத்த காலளவில் என்னால் கதையை உருவாக்க முடியவில்லை. இதனால் அது நடக்காமல் போய்விட்டது " என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






