என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி..! உருகிய ஜி.வி. பிரகாஷ்.. ஆரவாரம் செய்த ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ
    X

    என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி..! உருகிய ஜி.வி. பிரகாஷ்.. ஆரவாரம் செய்த ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

    • ஜி.வி. பிரகாஷ் வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.
    • 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

    ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவர் கதாநாயகனாக நடித்த பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது.

    ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.

    ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

    இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் நேற்று மலேசியாவில் நடந்த ஜிவி பிரகாஷ் கான்சர்ட்டில் சைந்தவி கலந்துக்கொண்டு பாடினார்.

    இந்த நிகழ்ச்சியில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தில் இருந்து பிறை தேடும் பாடலை இருவரும் இணைந்து பாடினார்கள்.

    அதில் வரும் வரிகளான " நிழல் தேடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் , ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா"

    அதற்கு ஜிவி பிரகாஷ் - " என் ஆயுள் ரேகை நீயடி. என் ஆணி வேரடி , சுமை தாங்கும் எந்தன் கண்மணி. என்னை சுடும் பனி" என்ற வரிகளை பாடினார்.

    இது இவர்கள் இருவருக்கும் இடையே பாடிய உணர்வு போல் இருப்பதனால் இது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. விவாகரத்திற்கு பிறகு ஒரே மேடையில் இருவரும் இணைந்து பாடியது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×