என் மலர்
சினிமா செய்திகள்

அஜித்தின் குட் பேட் அக்லி படம் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது: படக்குழு அறிவிப்பு
- குட் பேட் அக்லி திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- சிம்ரன் பங்குபெறும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
சென்னை:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்
திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
கடந்த பத்தாம் தேதி படம் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பெரும் பாராட்டை பெற்றது.
இந்நிலையில், உலக அளவில் இந்தப் படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.






