என் மலர்
சினிமா செய்திகள்

குட் பேட் அக்லி முதல் பசூக்கா வரை.. இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களின் லிஸ்ட்!
- அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
- தெலுங்கில் பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் சித்து நடித்துள்ள 'JACK ' படமும் ரிலீஸ் ஆகிறது.
திரையரங்கில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. ஆனால் இந்த வாரம் தமிழ் சினிமாவில் தனியாளாக களமிறங்குகிறது அஜித்தின் குட் பேட் அக்லி படம்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அஜித், தமிழின் உச்ச நட்சத்திரம் என்பதால் பெரும்பாலான திரையரங்குகள் நாளை (ஏப்ரல் 10) ரிலீஸ் ஆகும் குட் பேட் அக்லிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வாரம் தமிழில் வேறெந்த குறிப்பிடத்தகுந்த படங்களும் வெளியாகவில்லை.
ஆனால் மற்ற மொழி படங்கள் பலவும் இந்த வாரம் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அந்த வரிசையில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நடித்த 'பசூக்கா' திரைப்படம் நாளை (ஏப்ரல் 10) வெளியாகிறது. இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் கதைக்களத்துடன் பசூக்கா அமைந்துள்ளது.
மேலும் பசில் ஜோசப் நடித்த 'மரணமாஸ்' நாளை வெளியாகிறது. பசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.
இப்படத்தில் ஒரு வித்தியாசமான ஃபன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரம் மற்றும் தோற்றத்தில் காணப்படுகிறார். இதனால் மரண மாஸ் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதுதவிர காலித் ரஹ்மான் இயக்கிய 'ஆலப்புழா ஜிம்கானா' நாளை ரிலீஸ் ஆகிறது. இந்தியில் சன்னி தியோல் நடித்துள்ள 'Jaat' திரைப்படமும், தெலுங்கில் பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் சித்து, பிரகாஸ்ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'JACK ' என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.