என் மலர்
சினிமா செய்திகள்

நடிப்பதை நிறுத்தப்போகிறாரா சமந்தா? - ரசிகர்கள் அதிர்ச்சி
- பல புதிய பரிமாணங்களை எடுக்கவும் யோசிக்கிறேன்.
- வருங்காலத்தில் நான் படத் தயாரிப்பு மற்றும் சில தொழில்களில் கவனம் செலுத்தலாம் என்று யோசிக்கிறேன்.
பல்வேறு பிரச்சனைகளை கடந்து மீண்டும் நடிக்க வந்துள்ள சமந்தா, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தெலுங்கில் அவர் தயாரித்து வெளியிட்ட 'சுபம்' படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
தற்போது சினிமாவில் இருந்து விலகப்போவதாக சமந்தா கூறியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமீபத்தில் ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலில், "ரசிகர்கள் எனக்கு தந்த ஆதரவை என்றுமே நான் மறக்க மாட்டேன். அதேவேளை பல புதிய பரிமாணங்களை எடுக்கவும் யோசிக்கிறேன்.
வருங்காலத்தில் நான் படத் தயாரிப்பு மற்றும் சில தொழில்களில் கவனம் செலுத்தலாம் என்று யோசிக்கிறேன். எனவே நடிப்பதை நிறுத்தலாமா? என்றும் யோசிக்கிறேன்" என்று சமந்தா குறிப்பிட்டார்.
சமந்தாவின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சி கொள்ள செய்தாலும், 'சமந்தா விளையாட்டுக்காக இதை சொல்லியிருக்கலாம்' என்று மனதை தேற்றி வருகிறார்கள்.






