என் மலர்
சினிமா செய்திகள்

துச்சாதனன்- திரை விமர்சனம்
நாயகன் விகாஷ் சத்தியமங்கலம் பகுதியில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஒருநாள் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்ததாக தகவல் கிடைக்கிறது. அங்கு செல்லும் விகாஷ், இது தற்கொலை இல்லை கொலை என்று கண்டுபிடிக்கிறார். இதையடுத்து யார் கொலை செய்து இருப்பார்கள் என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில் அந்த பெண்ணை கொலை செய்தவர் யார்? எதற்காக கொலை செய்தார்? போலீஸ் அதிகாரி விகாஷ் கொலையாளியை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விகாஷ் போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவுக்கான நடை, உடை என கவர முயற்சி செய்து இருக்கிறார். கொஞ்சம் நடிப்பிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள். சிங்கம் புலியின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை.
இயக்கம்
ஒரு தற்கொலை, அதன் பின்னணி என்ன என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தளபதி. படம் ஆரம்பித்து பத்து நிமிடத்திலேயே கதையை சொல்லி விட்டார் இயக்குனர். திரைக்கதையில் சுவாரசியம் இல்லாமல் இயக்கி இருப்பது பலவீனம். அடுத்தடுத்து யூகிக்கும் படியான காட்சிகள் வைத்து இருப்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இசை
விஜய் பிரபுவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
பாலமுருகனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.






