என் மலர்
சினிமா செய்திகள்

அக்டோபர் மாதத்தில் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
- படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் நேற்று வெளியானது.
- தீபாவளியையொட்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.
ஒவ்வொரு மாதமும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் மாதம் 'இட்லி கடை', 'காந்தாரா சாப்டர்1', 'டியூட்', 'பைசன்', 'ஆர்யன் ', 'ஆண் பாவம் பொல்லாதது', 'தடை அதை உடை', 'தேசிய தலைவர்', 'ராம் அப்துல்லா ஆண்டனி', 'மெசஞ்சர்', 'பரிசு' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழ் சினிமா அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 'இட்லி கடை', 'காந்தாரா சாப்டர்1', 'டியூட்', 'பைசன்' ஆகிய 4 படங்கள் மட்டுமே இணைந்து இந்த வசூல் சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இட்லி கடை
தனுஷ் இயக்கி நடித்த படம் 'இட்லி கடை' இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூலும் குவித்து வருகிறது.
காந்தாரா சாப்டர்1
பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வசூலில் சாதனை படைத்து வருகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் நேற்று வெளியானது.
டியூட்
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளியையொட்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் குவித்து வருகிறது.






