என் மலர்
சினிமா செய்திகள்

The Real Debut... தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் இடம்பிடித்த துருவ் விக்ரம்
- பைசன் திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
- பைசன் படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பைசன் திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக இப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், 'பைசன்' திரைப்படத்தில் நடித்ததற்காக, துருவ் விக்ரம் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவின் 2025-ஆம் ஆண்டின் சிறந்த கலைஞர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல், நடிகைகள் கிருத்தி சனோன், ருக்மிணி வசந்த், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் துருவ் விக்ரமும் இடம்பிடித்துள்ளார்.






