என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Youth | அசுரன் வசனம் பேசி கென்-ஐ கலாய்த்த தனுஷ்
    X

    Youth | அசுரன் வசனம் பேசி கென்-ஐ கலாய்த்த தனுஷ்

    யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    `அசுரன்', `விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். நடிப்பு மட்டுமின்றி சில திரைப்படங்களில் கென் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் கென் கருணாஸ் "யூத்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகிறது. `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில், யூத் திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர், இயக்குநர் தனுஷ், "சிதம்பரம்.. நம்ம கிட்ட காடு இருந்து எடுத்துகிடுவானுங்க.. ரூவா இருந்தா புடிங்கிருவானுங்க.. ஆனா படிப்பா மட்டும் எடுத்த முடியாதுனு சொன்னதுக்கு.. அதா தவிற நீ எல்லாமே பண்ணிருக்க.. ஒரே பைக்-ல மூன்று ஹீரோயின்களோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ெவளியாச்சு.

    அசுரன் போட்டோஷூட்டின் போது தான் முதல் முறையாக கென்-ஐ சந்தித்தேன். கேரவனில் வெற்றியிடம், இந்த சிறுவன் வேண்டாம், வேறு யாரையாவது பாருங்கள் என்றேன். அவர் தான் கொஞ்சம் டைம் கொடுங்கள் என்றார். அதன்பிறகு முதல் நாள் படப்பிடிப்பில் கென் நடித்த முதல் காட்சி முடிந்த பிறகு வெற்றி மாறனிடம் இந்த சிறுவனிடம் கொஞ்சமும் தயக்கமோ, அச்சமோ இல்லை, சரியாக தேர்வு செய்துள்ளீர்கள் என்றேன். அசுரன் முடிந்த பிறகு கென் பாதை மாறியது.

    பிறகு திடீரென படப்பிடிப்பில் என்னை சந்தித்த கென், படம் ஒன்றை இயக்கப்போவதாக கூறினான். அவன் அப்படி சொன்னதும் ஷாக் ஆகிட்டேன்.. 'ஏன் பா அவசரா படுகிறாய்? இன்னும் கற்றுக் கொள் என்றேன்..' அவன் 'இல்ல சார்.. எடுத்துருவேன்..'னு சொன்னாரு.. அப்போ நான் அவனை நம்பவில்லை. ஆனால் கென், படத்தை முடித்து இங்கு கொண்டுவந்து சேர்த்து, நான் நினைத்தது தவறு என்று நிரூபித்துவிட்டான்.

    முன்பெல்லாம் நான் கென்-ஐ என் மகன் மாதிரி என்று சொன்னதுண்டு. ஆனால், லப்பர் பந்து திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், இல்லை என்றாவது கூறிவிடுங்கள், ஆனால் மாதிரி என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று, அது சரி தான். கென் என் மகன் மாதிரி இல்லை, கென் என் மகன் தான்.

    கென் பேசும் போது, நான் தெரிந்தோ தெரியாமலோ டைரக்ஷன் சொல்லி குடுத்ததாக சொன்னீங்க.. தெரிந்து தான் சொல்லி கொடுத்தேன். ஒருவரை பார்த்தாலே தெரியும் உருப்படுமா, உருப்படாதா என்று," என கூறினார்.

    Next Story
    ×