என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    குப்பை கிடங்கில் 7 மணி நேரம்: எப்படின்னு எனக்கு இன்னும் தெரியல- ராஷ்மிகாவை பாராட்டிய தனுஷ்
    X

    குப்பை கிடங்கில் 7 மணி நேரம்: எப்படின்னு எனக்கு இன்னும் தெரியல- ராஷ்மிகாவை பாராட்டிய தனுஷ்

    • சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் "குபேரா"
    • திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் "குபேரா". இது தனுஷின் 51-வது படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

    தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    இப்படத்தின் 3ஆவது சிங்கிள் இன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற குபேரா பட விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    அப்போது தனுஷிடம், குபேரா படப்பிடிப்பின்போது எந்த தருணம் உங்களுடன் என்றென்றும் இருக்கும்? கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு தனுஷ், நானும் ராஷ்மிகாவும் ஒரு குப்பை கிடங்கில் சுமார் 6-7 மணி நேரம் சூட்டிங்கில் நடித்தோம். ராஷ்மிகா நலமாக இருந்தார். அவர் "சார், எனக்கு வாசனை எதுவும் வரல.." என்றார். எப்படின்னு எனக்கு இன்னும் தெரியல என பதில் அளித்தார்.

    Next Story
    ×