என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அனலி- திரைவிமர்சனம்
    X

    அனலி- திரைவிமர்சனம்

    தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.

    நாயகி சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் ஊரிலிருந்து சென்னைக்கு வருகிறார். அதேசமயம் சக்தி வாசு சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்கிறார். சிந்தியா குழந்தையுடன், சக்திவாசு வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு உங்களிடம் சிக்கிக் கொள்கிறார்.

    ஒரு கட்டத்தில் கண்டெய்னர் குடோனில் இருந்து வெளியேறும் சிந்தியா, தனது குழந்தையையும் ஒரு பையையும் அங்கு தொலைத்து விடுகிறார்.

    இறுதியில் குழந்தையும் பையையும் சிந்தியா மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்தியா லூர்டே, குழந்தை பாசம், ஆக்சன் என நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    படத்திற்கு பெரிய பலம் சக்தி வாசு தேவன் நடிப்பு. வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். கபீர் சிங், இனியா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    கடத்தல் கும்பலிடம் சிக்கி அவர்களை போலீசிடம் சிக்க வைக்கும் பெண்ணை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் தீனா. பழைய கதையை தூசி தட்டி எடுத்து இருக்கிறார் இயக்குனர். அதிக லாஜிக் மீறல்கள், காட்சிகளின் தொடர்ச்சி இல்லை. திரைக்கதை வலுவில்லை. காட்சிகளின் சுவாரசியம் இல்லை. இவை அனைத்தையும் சரி செய்து இருக்கலாம்.

    இசை

    தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கவரவில்லை.

    ரேட்டிங்-1.5/5

    Next Story
    ×