கார்த்தியின் `மார்ஷல்' படத்தில் புதிய வில்லனாக களமிறங்கும் ஆதி!

தனக்கென ரசிகர்களை பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் கார்த்தி.பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.
கார்த்தியின் `மார்ஷல்' படத்தில் புதிய வில்லனாக களமிறங்கும் ஆதி!
Published on

காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மெய்யழகன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

இதனிடையே, 'டாணாக்காரன்' பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். இப்படத்திற்கு 'மார்ஷல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். படத்தின் வில்லனாக நிவின் பாலி நடிக்க இருந்த நிலையில் கால் ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை அதனால் வில்லனாக நடிகர் ஆதி பினிஷெட்டி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com