என் மலர்
சினிமா செய்திகள்

ஜெய்பீம்
ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.
நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

ஜெய்பீம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. இந்நிலையில் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில், விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, மேலும் படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.
#JaiBhim wins the Best Film & Best Supporting Actor awards at the #DadaSahebPhalkeFilmFestival
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 3, 2022
Thank you @dadasahebfest for the honour!
Congratulations #Manikandan on winning the Best Supporting actor
➡️https://t.co/8pwZaoeO17@Suriya_offl#Jyotika@tjgnan@rajsekarpandian
Next Story