என் மலர்
சினிமா செய்திகள்

எல்லி அவுரம்
ஸ்வீடன் நடிகை கொடுத்த தனுஷ் பட அப்டேட்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தில் பணியாற்றிய புகைப்படத்தை பகிர்ந்த ஸ்வீடன் நாட்டு நடிகை.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார்.

செல்வராகவன் - எல்லி அவுரம் - தனுஷ்
நானே வருவேன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. பலரும் எதிர்ப்பார்த்திருக்கும் இப்படத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை இணைந்திருக்கும் உறுதிப்படாத தகவலை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படத்தின் வாயிலாக அவர் நானே வருவேன் படத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, இறுதியாக உங்கள் அனைவருடனும் இதைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உற்சாகமாகவும் உணர்கிறேன். இப்படத்தில் எனக்கு இடம்பெற்ற பகுதியை நேற்று எனது அற்புதமான சக நடிகர் தனுஷுடனும், புத்திசாலித்தனமான இயக்குனர் செல்வராகவனுடனம் முடித்துள்ளேன். என்னை இப்படத்தில் இணைத்ததற்கு நன்றி. என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதன் வாயிலாக எல்லி அவுரம் இப்படத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
Feeling so blessed & excited to finally share this with you all❤️🎬Yesterday was a wrap for me, completing my part in #NaaneVaruven with my wonderful co-actor @dhanushkraja , brilliant director @selvaraghavan sir and outstanding dop @omdop ❤️.
— Elli AvrRam (@ElliAvrRam) April 10, 2022
Thank you for having me onboard🙏 pic.twitter.com/OKappitHU0
Next Story