என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

X
சிவகார்த்திகேயன்
மங்காத்தா கூட்டணியில் சிவகார்த்திகேயன்?
By
மாலை மலர்20 Feb 2022 5:29 AM GMT (Updated: 20 Feb 2022 5:29 AM GMT)

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தின் கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'டான்', 'அயலான்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டுள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்துப்போகவே ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட் பிரபு
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் 'மன்மத லீலை' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஹாலிவுட் படங்களை போன்ற முத்தக்காட்சிகள் கொண்ட இப்படத்தின் கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியது. இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Next Story
×