என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

X
மகான்
மகான் காந்திமகான்.. வெளியான மகான் டீசர்
By
மாலை மலர்31 Jan 2022 6:37 AM GMT (Updated: 31 Jan 2022 6:37 AM GMT)

விக்ரமும் துருவும் இணைந்து நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் ‘மகான்’ படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் மகான். விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருப்பதாலே படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தை பீசா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார்.

மகான்
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் அறிவிப்புகள் தொடர்சியாக வெளியாகின. இந்த திரைப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

கார்த்திக் சுப்பராஜ்
இந்நிலையில் மகான் படத்தின் டீசரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருக்கிறார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#MahaanTeaserhttps://t.co/PygCbE0mqH#ChiyaanVikram#Mahaan#MahaanOnPrime#MahaanFromFEB10@PrimeVideoIN@7screenstudio
— karthik subbaraj (@karthiksubbaraj) January 31, 2022
Next Story
×