என் மலர்tooltip icon

    சினிமா

    ஜாக்கி சான்
    X
    ஜாக்கி சான்

    கட்சியில் இணைய விரும்பும் ஜாக்கி சான்

    ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.
    பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பெய்ஜிங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, கடந்த சில ஆண்டுகளில் சீனா பல்வேறு துறைகளில் முன்னேறிவருவதாகவும், பிற நாடுகளுக்கு செல்லும்போது இதனை உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றி வருவதாய் குறிப்பிட்ட ஜாக்கி சான், அந்த கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

    ஜாக்கி சான்

    67 வயதாகும் ஜாக்கி சான், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். ஹாங்காங்கிற்கு எதிராக சீனா பல்வேறு அடக்குமுறைகளை கையாளும் நிலையிலும், ஆளும் சீன கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான கருத்துகளை ஜாக்கி சான் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
    Next Story
    ×