என் மலர்
சினிமா

கங்குலி
திரைப்படமாகும் கங்குலியின் வாழ்க்கை வரலாறு... ஹீரோ யார் தெரியுமா?
பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக உள்ளதை அவரே உறுதி செய்து இருக்கிறார்.
சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், எடுக்கப்பட்ட சச்சின் வாழ்க்கை படம், தோனியின் வாழ்க்கை படம் மற்றும் மற்ற விளையாட்டு வீரர்களின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து தற்போது தாதா என அன்பாக அழைக்கப்படும், கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த தகவலை அவரே சில தனியார் பத்திரிக்கை செய்திகளில் பேட்டியளித்து உறுதி செய்துள்ளார்.

கங்குலி - ரன்பீர் கபூர்
கங்குலி வேடத்தில் நடிக்க நடிகர் ரன்பீர் கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






