என் மலர்
சினிமா

கமல்
இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கௌரவ உறுப்பினராக இணைந்தார் கமல்
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் இசைக்கலைஞர் சங்கத்தில் கௌரவ உறுப்பினராக இணைந்து இருக்கிறார்.
சென்னையில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இசையமைப்பாளர் தினா தலைவராக உள்ளார். சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு கெளரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கமல் ஹாசனின் அலுவலகத்துக்கு தினாவும் சங்க உறுப்பினர்களும் நேரில் சென்று கமல் ஹாசனிடம் கெளரவ உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்கள்.

கமலுடன் இசைக் கலைஞர்கள்
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கமல் ஹாசன் இணைந்தது சங்கத்துக்கும் இசைக்கலைஞர்களுக்கும் பெருமை என்று தினா கூறியுள்ளார்.
Next Story






