என் மலர்
சினிமா

விவேக்
சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் - விவேக் மறைவிற்கு பார்த்திபன் இரங்கல்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் காலமானார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணியளவில் காலமானார்.

இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பார்த்திபன், சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்! என்று இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
Next Story






