என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
![ஜீத்து ஜோசப், கமல் ஜீத்து ஜோசப், கமல்](https://img.maalaimalar.com/Articles/2021/Feb/202102191322149400_Tamil_News_Tamil-cinema-Jeethu-joseph-says-about-papanasam-2_SECVPF.gif)
X
ஜீத்து ஜோசப், கமல்
‘பாபநாசம் 2’ உருவாகுமா? - இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம்
By
மாலை மலர்19 Feb 2021 7:52 AM GMT (Updated: 19 Feb 2021 7:52 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திரிஷ்யம் 2 வெளியாகி உள்ள நிலையில், தமிழில் பாபநாசம் 2 உருவாகுமா என்பது குறித்து அப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். பாபநாசம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
தற்போது மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் 2 படம் வெளியாகி உள்ளது. ஆதலால் தமிழிலும் பாபநாசம் 2 வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. மேலும் அதில் கமல் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.
![பாபநாசம் பட போஸ்டர் பாபநாசம் பட போஸ்டர்](https://img.maalaimalar.com/InlineImage/202102191322149400_1_aoodk6._L_styvpf.jpg)
இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். அதில் அவர் கூறியதாவது: “கமல் அனுமதி கிடைத்தால் பாபநாசம் 2 படத்தை இயக்க தான் தயாராக இருக்கிறேன். கமலின் முடிவை பொறுத்தே ‘பாபநாசம் 2’ படம் உருவாகுமா? இல்லையா? என்பதை சொல்ல முடியும்” என அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)