என் மலர்tooltip icon

    சினிமா

    நக்மா - கங்கனா
    X
    நக்மா - கங்கனா

    நக்மாவிற்கு எதிராக களமிறங்கிய கங்கனா ரசிகர்கள்

    நடிகையும் அரசியல்வாதியுமான நக்மாவிற்கு எதிராக பாலிவுட் நடிகை கங்கனாவின் ரசிகர்கள் எதிராக களமிறங்கி இருக்கிறார்கள்.
    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு வாரிசு அரசியல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கங்கனா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள். இந்நிலையில், கங்கனாவை கிண்டல் செய்து நக்மா ட்வீட் செய்துள்ளார். இதைப் பார்த்த கங்கனா ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

    பஞ்சோலி கங்கனா ரனாவத்தின் காதலர் கிடையாது என பல முறை கங்கனா விளக்கி உள்ளார். ஆரம்பத்தில் ஆலோசகராக இருந்த அவர், திடீரென தவறான ஆலோசனைகளை வழங்கும் நபராக மாறி விட்டார். மேலும், ஒவ்வொரு முறையும் ஆடிஷனுக்கு போகும் போதும் கங்கனாவை அவர் தாக்கி உள்ளார். அவர் மூலமாக சினிமாவுக்கு கங்கனா வரவில்லை என கங்கனா தரப்பு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.



    மேலும் நடிகை நக்மா மற்ற நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களை கங்கனா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரவவிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். நக்மா - கங்கனா ரனாவத் இடையேயான மோதல் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×