என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விவேக் மைத்துனருக்கு கொரோனா
Byமாலை மலர்13 July 2020 12:48 PM GMT (Updated: 13 July 2020 12:48 PM GMT)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் விவேக், தனது மைத்துனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
கொரோனா வைரசால் பல திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகிற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நேற்று அமிதாப்பச்சன் குடும்பத்திலுள்ள நால்வருக்கும் அனுபம்கெர் குடும்பத்தில் உள்ள நால்வருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக்கின் மைத்துனருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் விவேக் கூறியுள்ளார்.
எனது மைத்துனர்,கொரோனாவால்) காய்ச்சல்,மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி,சிகிச்சை,தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி @Vijayabaskarofl@RAKRI1@dromramesh
— Vivekh actor (@Actor_Vivek) July 13, 2020
இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது மைத்துனர், கொரோனாவால்) காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ இவ்வாறு நடிகர் விவேக் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×