search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய்
    X
    விஜய்

    சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய், அவர் நடித்துள்ள படம் சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்காக அவர் நடிக்கும் படங்கள் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது.

    இந்நிலையில், விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'ஜில்லா' படத்தின்  தெலுங்கு பதிப்பை சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை 2014-ம் ஆண்டே தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டு, அங்கு நகைச்சுவையில் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் பிரம்மானந்தாவை வைத்து சில காட்சிகள் ஜில்லா படத்தில் எடுக்கப்பட்டிருந்தன. தமிழில் அந்த காட்சிகள் சேர்க்காமல் நீக்கப்பட்டிருந்தது.

    ஜில்லா பட போஸ்டர்

    சில காரணங்களால் அப்போது ஜில்லா படம் தெலுங்கில் வெளியாகவில்லை. எனவே தற்போது தெலுங்கில் வெளியாவதால் விஜய்யுடன் பிரம்மானந்தம் நடித்து, நீக்கப்பட்ட காட்சிகள், மீண்டும் இணைக்கப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    ஜில்லா படத்தை நீசன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜயுடன் மோகன் லால் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்.  காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் மஹத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
    Next Story
    ×