என் மலர்
சினிமா

சாந்தனு, அதுல்யா
சாந்தனுவின் “முருங்கைக்காய் சிப்ஸ்”
ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்க உள்ள “முருங்கைக்காய் சிப்ஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கும் புதிய படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிட்டுள்ளனர். இதில் ஹீரோவாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள். தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
.@LIBRAProduc Next With #FirstMan#MurungaikaiChips
— Maalai Malar News (@maalaimalar) July 8, 2020
*ing @ungalKBhagyaraj@imKBRshanthnu@AthulyaOfficial@manobalam@Srijar1@dharankumar_c@nivethajoseph@J0min@dop_ramesh@ActorMadhumitha@reshupasupuleti@shijualex09@onlynikil@lightson_mediapic.twitter.com/a2bLotKnJU
Next Story






