என் மலர்
சினிமா

தனுஷ்
ஜகமே தந்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1-ம் தேதி, இப்படம் ரிலீசாவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ந் தேதி ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
First single 'Rakita Rakita Rakita' from D's Day - July 28th 😊
— karthik subbaraj (@karthiksubbaraj) July 1, 2020
Time to Sing #Rakitaரகிடరకిట@dhanushkraja@sash041075@StudiosYNot@Music_Santhosh@Lyricist_Vivek@kshreyaas@vivekharshan#JagameThandhiram#JagameTantram#JT#DhanushBdayMonthBeginspic.twitter.com/xuJtWmO8z9
Next Story






