என் மலர்
சினிமா

சூரி
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்திய சூரி
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் நகைச்சுவை நடிகர் சூரி பாடம் நடத்தினார்.
‘கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கும் நடிகர் சூரி, நிவாரண உதவிகள் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என ஊரடங்கிலும் பிசியாக இயங்கி வருகிறார்.
அந்தவகையில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் நகைச்சுவை நடிகர் சூரி பாடம் நடத்தினார். பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டும் விதமாக சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடினார். கல்வியின் முக்கியத்துவம், விடா முயற்சி ஆகியவை குறித்து நகைச்சுவையாக அவர் பேசிய போது, மாணவர்களிடம் சிரிப்பலையும், குறும்பு கேள்விகளும் எழுந்தது. கலகலப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வை, அதிகாரிகளும் கண்டு ரசித்தனர்.
காணொலி காட்சி மூலம் பாடம் நடத்திய நடிகர்சூரி - வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து உற்சாகம்#Soori | #OnlineClasseshttps://t.co/VCwLTCTOxV
— Thanthi TV (@ThanthiTV) June 11, 2020
Next Story






