என் மலர்
சினிமா

சாய் பல்லவி, ஜெயம் ரவி
6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி.... வைரலாகும் புகைப்படங்கள்
ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிகை சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார்.

தற்போது விராட பருவம், என்.சி 20 ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரேமம் படம் மூலம் தான் சாய் பல்லவி நடிகையாக அறிமுகமானதாக கூறப்படும் நிலையில், அவர் 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த படத்தில் கங்கனா ரனாவத்துடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story






