என் மலர்
சினிமா

ஐசரி கணேஷ்
தந்தை நினைவு நாளில் நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் பணம் போட்ட ஐசரி கணேஷ்
தந்தை நினைவு நாளை முன்னிட்டு நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் ஐசரி கணேஷ் பணம் செலுத்தி இருக்கிறார்.
தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் ஐசரிவேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ஆம் தேதி அன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இன் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், ஆயிரக்கணக்கான நலிந்த நாடக நடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம்.
இவ்வாண்டு COVID 19 பெரும் தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத்தினை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாக செலுத்தியுள்ளார் டாக்டர் ஐசரி கே. கணேஷ்.
சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story