என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் மன்சூரலிகான்
    X
    நடிகர் மன்சூரலிகான்

    முதல்வருக்கு கோரிக்கை வைத்த மன்சூரலிகான்

    நடிகர் மன்சூரலிகான் மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
    கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு மேற்கொண்டிருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக மக்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார்.
    Next Story
    ×