என் மலர்
சினிமா

விஜய் தேவரகொண்டா
சவாலை ஏற்க முடியாமல் தவிக்கும் விஜய் தேவரகொண்டா
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா தற்போது நடைபெற்று வரும் சவாலை ஏற்க முடியாமல் தவித்து வருவதாக கூறியிருக்கிறார்.
தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவருக்கு தமிழில் நல்ல படங்கள் இன்னும் அமையவில்லை.
தற்போது டோலிவுட்டில் பிரபலமாகிவரும் #BeTheREALMAN சேலஞ்சில் பங்கேற்கும்படி அவரை பிரபல இயக்குனர் கொரட்டல சிவா நாமினேட் செய்திருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள விஜய் தேவரகொண்டா. "சிவா சார்.. என் அம்மா என்னை எந்த வேலையும் செய்ய விடமாட்டேன் என்கிறார். நான் எதாவது செய்தால் அவரது வேலை இரண்டு மடங்காக ஆகிவிடுகிறது என்கிறார். என்னை இங்கு real men ஆக பார்க்கவில்லை, சின்ன பையனை போல்தான் நடத்துகிறார். அதனால் நான் லாக்டவுனில் செய்யும் வேறு சில விஷயங்கள் பற்றி வீடியோ போடுகிறேன்" என கூறியுள்ளார்.
Next Story






