என் மலர்
சினிமா

வடிவேலு
வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன் - வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தொடர்ந்து வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலு பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள, இந்த வீட்டை தாண்டி நீயும் வர கூடாது, நானும் வர மாட்டேன், அது கோடு, இது ரோடு என வழக்கம் போல தனது ஸ்டைலில் செம காமெடியாக பேசியுள்ளார்.
மேலும் இந்த நேரத்தில் மருத்துவர்கள்தான் கடவுள், அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், மனிதநேயங்கள் ஒன்று சேரனும். மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும்'' என அவர் தெரிவித்துள்ளார்.மனிதநேயங்கள் ஒன்று சேரனும்
— Actor Vadivelu (@VadiveluOffl) April 23, 2020
மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும் 🙏 pic.twitter.com/nmlFqoyltr
Next Story






