என் மலர்
சினிமா

சூரி
சூரி செய்த பிரியாணி, கலாய்த்த மனைவி..
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் சூரி செய்த பிரியாணியை அவரது மனைவி கலாய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் இன்று வரை சமூக வலைதளங்களில் அது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று தன்னுடைய வீட்டில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தன்னுடைய குடும்பத்திற்காக சூரி பிரியாணி சமைத்துள்ளார்.
மனைவியிடம் டேஸ்ட் பார்க்குமாறு கூற அவர் லைட்டாக சாப்பிட்டு விட்டு தூவென துப்புகிறார். சூரி என்னாச்சு என கேட்க, வாயில உப்பு என அவர் கூறுகிறார். வாயில உப்பு எதற்கு எடுத்து போட்ட கறிய சாப்பிட வேண்டியதுதானே சூரி கிண்டலடிக்கிறார்.
Next Story






