search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரபலங்களுடன் விஜய் சேதுபதி
    X
    பிரபலங்களுடன் விஜய் சேதுபதி

    பாலிவுட் பிரபலங்களுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, பாலிவுட் பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் லாபம், க/பெ ரணசிங்கம், மாமனிதன், தளபதி 64, கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். 

    விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியிலும் ஆமிர்கானுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவுகின்றன.

    விஜய் சேதுபதி

    இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்களான விஜய் தேவரகொண்டா, பார்வதி ஆகியோருடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், இதில் அவர்கள் சினிமா குறித்து விவாதித்தகாவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகரும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×