search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கே.பாலசந்தர் விழாவில் ரஜினி, கமல்
    X
    கே.பாலசந்தர் விழாவில் ரஜினி, கமல்

    ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி, கமல்

    சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சிலையை ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் திறந்து வைத்தனர்.
    சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர். 

    கே.பாலசந்தர் விழா

    கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் நிறுவனம், ராஜபார்வை, விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், ஹேராம், விஸ்வரூபம், தூங்காவனம், சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்கள்.
    Next Story
    ×