என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் சேதுபதி
    X
    விஜய் சேதுபதி

    தீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல்

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகாது என லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

    விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ்

    விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைத்துள்ளனர். தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன் படம் தள்ளிப்போயுள்ளதாக லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் நவம்பர் 8 அல்லது 15ந் தேதி ரிலீசாக கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×