என் மலர்tooltip icon

    சினிமா

    சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
    X

    சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், படங்களை தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். 

    இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான "கனா" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ரியோ நடிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 



    இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 3-வது படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்க உள்ளார். 

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. இப்படத்திற்கு ”வாழ்” என பெயரிடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×