என் மலர்
சினிமா

ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த மூன்று படங்களை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். #JayamRavi
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அடங்க மறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டேவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சண்டக்கோழி 2, தடம், நீயா 2 உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய, ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுகுறித்து ஜெயம் ரவி கூறும்போது,
"நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில், இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். அவர்களின் நீண்ட பயணத்தில் ஒரு அங்கமாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
தற்போது படங்களை பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஜெயம் ரவி கூறினார். #JayamRavi #ScreenSceneMediaEntertainment
Next Story






