என் மலர்
சினிமா

ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக இயக்குநர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். #Vikram #MahavirKarna
ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் தற்போது மகாவீர் கர்ணா படத்தில் இணைந்துள்ளார்.
விக்ரமை கதாநாயகனாக கொண்டு தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் மகாவீர் கர்ணா படத்தைமலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இயக்குகிறார்.

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத் ராமோஜி ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து இயக்குநர் ஆர்.எஸ்.விமல், “இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது.
மகாவீர் கர்ணா தொடங்கியது. சிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நன்றி கடவுளே” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஐதராபாத்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இப்படம் 32-க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது. #Vikram #MahavirKarna
Next Story






