என் மலர்
சினிமா

அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக சில நடிகைகள் கூறுவதில் பொய் இருக்காது, அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார். #KajalAggarwal
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்தில் தனது கதாபாத்திரம் வித்தியாசமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
காஜலை பார்த்தால் சாதுவாக தெரிகிறார். ஆனால் நிஜத்தில் கோபம் வந்தால் காளியாக மாறிவிடுவாராம். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:-
‘நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள். மார்க்கெட் போய் சும்மா உட்கார்ந்து விடுவோமோ என்று நான் ஒரு நாளும் பயந்ததே இல்லை.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. நான் தைரியமானவள். எனக்கு என்னை காத்துக் கொள்ள தெரியும். எனக்கு கோபம் வந்தால் காளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனின் சட்டை காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்’ என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். #KajalAggarwal #Indian2 #ParisParis
Next Story






