என் மலர்
சினிமா

ரெஜினாவின் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ரெஜினா கசாண்ட்ரா இந்தியில் அறிமுகமாகும் படத்தில், அவரது கதாபாத்திரத்திற்கு முதலில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். #ReginaCassandra
தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் நடித்து வந்த ரெஜினா கசண்ட்ரா, ஏக் லட்கி கோதேக் காதா ஐசா லகா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்தில் ரெஜினா தான் நடிக்கும் கதாபாத்திரத்தை ரகசியமாகவே வைத்து இருந்தார். படத்தின் டிரைலர் வெளியானபோது தான் சோனம் கபூரும், ரெஜினாவும் இதில் ஓரின சேர்க்கையாளராக நடிக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

ரெஜினாவின் இந்த துணிச்சலான முயற்சிக்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அமைதியாக இருந்தார். தற்போது ரெஜினாவுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் வேண்டும்.
இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்ற ரீதியில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் ரெஜினாவை பாராட்டி வருகிறார்கள். இந்த பாராட்டுகள் ரெஜினாவை உற்சாகப்படுத்தி இருக்கிறது. முதன்மை கதாநாயகியாக நடிப்பதற்கு விருப்பப்பட்டு கதைகள் கேட்டு வருகிறார். #ReginaCassandra
Next Story






